இளைஞர் சேவை மன்றத்தின் கதிர்காமம் யாத்திரையின் இரண்டாம் நாள் பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆண்மீக பாத யாத்திரை நேற்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் நாளான இன்று கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் வரவேற்கப்பட்ட பாதயாத்திரிகளுடன், கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு விசேட பூசையும் இடம்பெற்றது.
தொடர்ந்து பாதயாத்திரைப் பொதிகளும், பொருத்தமான ஆடைளும் பயண செலவு தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்தில் நால்வர் குறித்த நடைபயணத்தில் இணையவுள்ளதுடன், நல்லிணக்க வெளிப்பாடாக 50 சிங்கள இளைஞர்களும் இந்த யாத்திரையில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.காமினி மற்றும் கிளிநொச்சி உதவிப் பணிப்பாளர் இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உறுப்பினர், பிரதேசங்களின் இளைஞர் சம்மேளங்களின் உறுப்பினர்கள் நி்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.