27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் | பெரு – சிலி ஆட்டம் சமன்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்லிங்டன் நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிலி – பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி சமனிலையில் முடிவடைந்தது.

சிலி அணியின் கோல் கீப்பரான 41 வயது கிளாடியோ பிராவோ அபாரமாக செயல்பட்டு பெரு அணியின் கோல் அடிக்கும் முயற்சியை 4 முறை தடுத்தார். இதில் 3 முறை பெரு அணியின் ஜியான்லூகா லபடுலாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

மேலும் 79-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பென்னா அடித்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் கட்டுப்படுத்திய ஜியான்லூகா லபடுலா இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் அதை கோல்கீப்பர் கிளாடியோ பிராவோ அற்புதமாக தட்டிவிட்டார். அவர், மீது பட்டு திரும்பிய பந்தை பாவ்லோ குரேரோ கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அதையும் கிளாடியோ பிராவோ தடுத்தார்.

முன்னதாக 16வது நிமிடத்தில் சிலி அணிக்கு கோல் அடிப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியின் வீரர் அலெக்சிஸ் சான்செஸ் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. ஆட்டம் 0-0 என சமனிலையில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இன்று நடைபெறும்ஆட்டங்களில் மெக்சிகோ – ஜமைக்கா அணிகளும் ஈக்வேடார் – வெனிசுலா அணிகளும் மோதுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment