பூனைக்கு சிகிச்சை அளிக்க முடியாது என சாவகச்சேரி கால்நடை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் அதட்டலான தொனியில் சாவகச்சேரி பிரதேசத்தினை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு நேற்று முன்தினம் பதிலளித்துள்ளதாக குறித்த வைத்தியசாலைக்கு தமது கால்நடைகளை எடுத்து சென்றோர் தெரிவித்தனர் .
நேற்று முன்தினம் காலை பூனை ஒன்றினை சத்திர சிகிச்சைக்காக ஏற்கனவே கால்நடை வைத்திய அதிகாரியின் அலுவலகத்தினால் நேரம் ஒதுக்கபட்ட நிலையில் வயோதிப பெண் தனது பூனையுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றும் பூனைக்கான மயக்க மருந்து வரவில்லை மீண்டும் இன்னொரு திகதியில் வாருங்கள் என உதவியாளர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து குறித்த வயோதிப பெண் எதற்க்காக இவ்வாறு செயக்கின்றீர்கள் நீங்கள் தந்த திகதிக்கு தானே வந்தேன் என வினவியுள்ளார்.
அடுத்து பதிலளித்த குறித்த கால்நடை வைத்திய அதிகாரி இது அரசாங்க கால்நடை வைத்தியசாலை இங்கு ஆடு மாட்டுக்கு மட்டுமே சிகிச்சையளிப்போம் பூனைக்கு வைத்தியம் செய்யமுடியாது .மருந்து இன்னும் கிடைக்கவில்லை. இந்த வயோதிப பெண்ணிற்கு இனி நேரம் கொடுக்கவேண்டாம் என உரத்த தொனியில் கூறியதுடன் முடிந்தால் தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார்.




