இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஒரு நாள் பயணமாக இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் வந்திறங்கிய விமானம் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் பகுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் குழுவினர் விசேட வாகன பேரணியில் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.
கலாநிதி ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் இன்று 20ஆம் திகதி 06.35க்கு அதே விமானத்தில் புதுடெல்லிக்கு செல்லவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.




