அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) பிஎன்ஜி ஜூவல்லர்ஸ் கடையில் சுமார் 20 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்துள்ளனர்.
சுத்தியல் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி, காட்சிப் பெட்டிகளை உடைத்து அவர்கள் நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மே மாதம் சன்னிவேல் நகரிலுள்ள மற்றொரு நகைக் கடையில் இதேபோன்ற திருட்டு நடந்துள்ளது. இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். கொள்ளை நடந்தபோது கடையின் முன் பகுதியில் இரண்டு ஊழியர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
முழுத் திருட்டுச் சம்பவமும் முடிய இரண்டரை நிமிடங்கள் மட்டுமே ஆனது. கொள்ளையர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் தங்கள் பைகளில் விரைவாக நிரப்பிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சன்னிவேல் பொலிசார் உடனடியாக செயற்பட்டு, கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். கொள்ளையர்கள் வேகமாகச் சென்று பல வாகனங்களில் தப்பிச் சென்றனர். அவர்களை பொலிசார் விரட்டிச் செல்லும் காட்சிகளும் சினிமா பாணியில் வெளியாகியுள்ளது.
இதுவரை ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உடனடியாக சாண்டா கிளாரா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு தற்போது வெளியாகவில்லை. எவ்வாறாயினும், திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Raw video: Smash & grab robbery at Bay Area jewelry store.
Shocking video of a smash and grab robbery involving hammers and tools at Sunnyvale's PNG Jewelers USA. Police say they've made five arrests and are looking for more suspects. pic.twitter.com/VauMk16Vge
— AppleSeed (@AppleSeedTX) June 15, 2024




