இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக ஜூன் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தின் போது, தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதையும், இந்தியப் பிரதமரின் வரவிருக்கும் பயணத்திற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் தனது விஜயத்தில் கவனம் செலுத்துவார்.




