6 மாதங்களுக்குப் பிறகு பொதுவெளியில் பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன்!

Date:

பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன், தனக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதன் பிறகு முதல் முறையாக அவர் தற்போதுதான் பொதுவெளியில் வருகை தந்துள்ளார்.

42 வயதான அவர், பிரிட்டனின் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்திருந்தார்.

இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை லண்டன் நகரின் சாரல் மழைக்கு மத்தியில் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தனது மூன்று குழந்தைகளுடன் கேட் பயணித்தார். மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட பவனியில் அவர் கலந்து கொண்டார். இதில் அவரது கணவரும் பங்கேற்றார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தனது குடும்பத்துடன் இந்த விழாவை கண்டு களித்தார்.

“இன்னும் நோய் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறந்த மற்றும் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் நலனில் முன்னேற்றம் கண்டு வருகிறேன். எப்படியும் அடுத்த சில மாதங்கள் இந்த சிகிச்சை தொடரும்” என இளவரசி கேத் தெரிவித்திருந்தார்.

கடந்த 1760 முதல் ஆண்டுதோறும் பிரிட்டிஷ் மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு உட்பட சில நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்