வீதியில் சென்ற 14 வயது மாணவி… இறுக்கியணைத்து உம்மா: குடும்பஸ்தர் கைது!

Date:

14 வயது பாடசாலை மாணவியை இறுக கட்டியணைத்து முகத்தில் முத்தமிட்ட 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்தபோது, ​​அவரிடமிருந்து ஒரு கிராம் 80 மில்லி கிராம் கஞ்சாவை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அவருக்கு போதைப்பொருள் தொடர்பான ஆறு குற்றங்கள் இருப்பதாக இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் தெரிவித்தனர்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர், சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். உடனே, சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர் தாயுடன் பொலிசில் வந்து புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி, பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, அவர் சிறுமியின் தாயையும் தாக்கியதுடன், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை தாக்கி பல கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட சிறுமி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...

நடிகை ட்விஷா செலவுக்குக் கூட கணவர் பணம் தரவில்லை: சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் தகவல்

நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில்...

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை” – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்