கையில் கிடைத்த 30 கோடி ரூபாவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திண்டாடிய 3 பேர் கிளிநொச்சியில் கைது!

Date:

கிளிநொச்சியில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயத்தாளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவை சேர்ந்த 3 பேர், இந்த நாணயத்தாளை, இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளரை சந்தித்து பேசுவதற்காக சென்று கொண்டிருந்த போது, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான நாணயத்தாள், அதனுடன் தொடர்புடைய இரண்டு ஆவணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. செப்பு வடிவத்திலான மற்றைய இரண்டு ஆவணங்களை வைத்திருந்தாலே அந்த நாணயத்தாளை மாற்ற முடியும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

முல்லைத்தீவை சேர்ந்த பிறிதொரு நபர் இந்த நாணயத்தாளை தம்மிடம் தந்து, பணத்தை மாற்றும்படியும், அதன் பின் பணத்தை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென கூறியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

தனியார் வங்கி முகாமையாளரை அவர்கள் தொடர்பு கொண்டு, காசோலையை மாற்றுவது பற்றி பேசியதாகவும், கொண்டு வருமாறும், பார்த்து சொல்வதாக குறிப்பிட்டதாகவும் வங்கி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் இந்த வகை நாணத்தாள்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக முந்தைய காலங்களில் பேச்சுக்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நாணயத்தாளை எவ்வாறு பெற்றார்கள் என்பது பற்றி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்