கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 5 பொலிசாருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் வழங்கப்படும் போது காரணம் குறிப்பிடப்படுவது வழக்கமென்றும், தற்போது எந்த காரணமும் குறிப்பிடாமல் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.




