‘யாழில் டெஸ்ட் மட்ச் கிரவுண்ட் இருக்கிறதா என ஏன் கேட்டேன்?’: சஜித் விளக்கம்!

Date:

ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன் எந்தவித பேச்சு சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மகிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்மியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

நான் இங்கு வந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன். இதனை நாட்டின் அனைத்து இடங்களிலுமே முன்னெடுத்து வருகிறேன்.

நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கானை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

இவ்வாறு பாடசாலைக்கு, வைத்திய சாலைக்கு என உதவிகளை செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனைஓரு பணியாகச் செய்து வருகின்றேன்.

நான் இங்கு வந்து மைதானத்தில் கதைத்த ஒரு விடயத்தை சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். திட்டமிட்ட வகையில் அதனை வைத்து பிரச்சாரங்களைம் திட்டமிட்ட வகையில் முனெடுத்து வருகின்றறனர்.

குறிப்பாக நல்லாட்சி ஆட்சி காலத்தில் மண்டை தீவில் சர்வதேச கிறிக்கெற் விளையாட்டு மைதானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அதன் நினைவில் தான் மைதானம் தொடர்பாக இளைஞர்களிடம் வினவினேன். ஆனால் மண்டை தீவு என நினைவு வர வில்லை.

இதனால் மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம்அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம். ஆகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதற்கட்டதாக இந்த மைதானத்தை அமைப்போம்.

இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன. அதிலும் ஜனாதிபதி
ரணிலுடையடைய செயல்பாடு கோடிபதிகளை முன்னிறுத்தி நடக்கிறதே ஓழிய சாதாரண மக்களுக்கானது அல்ல.

நாட்டை பாதாளத்தில் தள்ளிய மகிந்த தரப்புடன் இணைந்து செயல்படும் நபர்களுடன்
ஒரு நாளும் நான் இணைந்து செயல்பட போவதில்லை. அவ்வாறானவர்களுடன் எந்த வித பேச்சுவர்த்தைகளும் இல்லை.

நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவோளை புதிய அரசியல் பிறாண்டாக எனது பணத்தை ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்