‘தமிழ் பொதுவேட்பாளர் இல்லையென்றால் நானே பொதுவேட்பாளராக போட்டியிடுவேன்’: இந்தியாவிலிருந்து வந்ததும் பகீர் கிளப்பும் சிவாஜி!

Date:

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் , நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் சிவில் சமூகத்திற்கு மக்கள் ஆணையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அது தவறானது. மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே நாடளுமன்ற உறுப்பினர்களை தெரிவித்து செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் தமக்கானதை தாமே தெரிவு செய்வார்கள். அவ்வாறு மக்களால் உருவானதே சிவில் சமூகம். அவர்களுக்கும் தமக்கு என்ன தேவை என்பதனை தீர்மானிக்க , சொல்ல முடியும் என மேலும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்