10 வருடங்களுக்கு முன்னர் வாடகை வீட்டில் வசித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
10 வருடங்களுக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர் வன்புணர்ந்துள்ளார்.
நீண்ட விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி, பிரதிவாதிக்கு 10,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நட்டஈடும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நட்டஈடு வழங்கப்படாவிட்டால் மேலும் 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு மென்மையான தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.
ஆனால் அதை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபாண்டிகே நிராகரித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் சமூகத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தின் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹரீந்திர ஜயசிங்க நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




