டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்

Date:

மத்திய கோபன்ஹேகனில் வெள்ளிக்கிழமையன்று ஒரு நபரால் தாக்கப்பட்டதையடுத்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக அவரது அலுவலகம் சனிக்கிழமை (ஜூன் 8) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பிரதமர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார், ஆனால் இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஃபிரடெரிக்சன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரடெரிக்சனின் அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று, பிரதம மந்திரி ஃபிரடெரிக்சன் கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஒருவரால் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய யூனியன் (EU) தேர்தலில் டேன்ஸ் வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மீதான தாக்குதல் நடந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஒரு படுகொலை முயற்சியில் பலத்த காயமடைந்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஃபிரடெரிக்சனைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட நபர், பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்