போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது!

Date:

போலி நாணயத் தாளுடன் இஸ்லாமியர் ஒருவரை கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து தனது குடும்பத்துடன் இஸ்லாமியர் ஒருவர் அரியாலை பகுதிக்கு வருகை தந்து வீடொன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் வெற்று தாள்களையும் போலி இயந்திரத்தினையும் விற்பனை செய்ய முயன்ற பொழுது கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்ததோடு சான்று பொருட்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சோதனையிட முற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த குடும்பத்தினர் தப்பிசென்றிருந்தமை தெரியவந்தது.

தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்