யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எதிர்காலத்தில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் மருத்துவபீட கட்டிடடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தற்போது கொழும்பு, கண்டி தேசியவைத்தியசாலைகள் செயற்பட்டு வரும் நிலையில், சில நாட்களின் முன்னர் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையக தரமுயர்த்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, நான்காவதாக யாழ்ப்பாணம் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.




