கார்த்தி – அரவிந்த் சாமியின் ‘மெய்யழகன்’ முதல் தோற்றம் வெளியீடு!

Date:

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக, அவர் நலன் குமாரசாமியுடன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

கார்த்தியின் 27 வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்டுவது போலவும், கார்த்தி அவருக்கு பின்னால் அமர்ந்திருப்பது போலவும் காட்சியளிக்கும் போஸ்டர் ஒருவித நாஸ்டால்ஜி தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் ஒன்றும் பின்ணனியில் உள்ளது. படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்