மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன்,குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் பேரில் ஒருவருக்கே இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில் இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.

பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் இவ்வாறான அரிதான பிறப்பாக கருதுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.

இதேநேரம் தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்