இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரிக்காமல் விட்டாலும், அந்த கட்சி உறுப்பினர்கள் பொதுவேட்பாளரையே ஆதரிப்பார்கள்!

Date:

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமென்ற அடிப்படையில் செயற்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பொதுவேட்பாளர் பிரசாரகர்களும், தமிழ் மக்கள் கூட்டணியினரும் நேற்று முன்தினம் காலையில், நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.

இது தொடர்பில் தமிழ்பக்கத்திடம் பேசிய க.வி.விக்னேஸ்வரன்- “ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாமென நாங்கள் பேசினோம். பொதுவேட்பாளரை மையமாக வைத்து தமிழ் கட்சிகள், மக்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவது பற்றி பேசினோம். மக்கள் நோக்கில் நிறுவனரீதியாக செயற்படும் அமைப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

பொதுவேட்பாளரை தமிழ் அரசு கட்சி போன்ற கட்சிகள் ஆதரிக்காமல் விடுவதை பற்றி நாங்கள் கவனம்கொள்ளவில்லை. கட்சிரீதியாக என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது எங்களை பாதிக்காது. கட்சி வேறு நிலைப்பாட்டை எடுக்கலாம், கட்சியிலுள்ளவர்கள் வேறு மாதிரி வேலை செய்யலாம். பொதுமக்கள் சார்பில் சிவில் சமூகம் முன்னெடுக்கும் நடவடிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம். அது தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பதால், அதற்கு முதலிடம் கொடுக்கிறோம்“ என்றார்.

இதேவேளை, நேற்று முன்தினம் மாலை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனையும் சந்தித்து பேசினர். அவரும் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்