திருகோணமலையில் சிக்கிய 4 கொள்ளைக்காரிகள்!

Date:

இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் பெண் கும்பலை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (18) காலை நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவு நேர பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை இழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பேருந்தில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தான் தூங்கிய பின்னர் தனது சூட்கேஸில் இருந்த தங்கத்தை திருடிச் சென்றதாக அந்தப் பெண் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

கந்தளாய் நகரில் இருந்து களவாடிய பெண்ணும் மேலும் மூன்று பெண்களும் இறங்கியுள்ளதாகவும், இதன் பிரகாரம் பொலிஸ் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நால்வரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 21, 23, 30 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் நீண்ட தூர பஸ்களில் பயணிகளின் பெறுமதியான பொருட்களை திருடுவதை சில காலமாக தொழிலாக செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்