இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாக தெரிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விவகாரத்தில் இணக்கப்பாடு எட்டுவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தலைவர் தெரிவு உள்ளிட்ட அனைத்து நிர்வாக தெரிவுகளையும் மீள நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) வவுனியாவில் நடந்த கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய குழு உறுப்பினர்களும் சட்டத்தரணிகளுமான எம் .ஏ. சுமந்திரன், கே.வி.தவராசா ஆகிய இருவரும், வழக்காளிகளின் சட்டத்தரணிகளுடன் சுமூகத்தீர்வுக்கு இணக்கப்பேச்சு நடத்தி இதனை கையாளுமாறு தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளும் மீள ஆரம்பத்தில் இருந்து யாப்புக்கு அமைவாக கையாள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1