மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.
இன்று (19) காலை 42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை பொலிசார் சோதனையிட்ட போது, ரூ.3 இலட்சம் பெறுமதியான நகையுடன் பயணித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைச்சம்பவம் தெரிய வந்தது.
தனது மாமா, மாமி, அவர்களது மகனையே அவர் கொலை செய்துள்ளார். நகை திருடுவதற்காக இந்த கொலைகள் நடந்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1