க.பொ.த சாதாரணதர விஞ்ஞான, ஆங்கில வினாத்தாள் சர்ச்சைக்கு அமைச்சரின் பதில்!

Date:

க.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அவர், விஞ்ஞான பாடத்தின் பல கேள்விகள் மற்றும் MCQ இல் சிக்கல்கள் பதிவாகியுள்ளன என்றும், பரீட்சைத்தாள் மதிப்பீட்டாளர்கள் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு ஆங்கில வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்றும் எம்.பி.கவிரத்ன தெரிவித்தார்.

மாணவர்களுக்கு எந்த வித அநீதியும் ஏற்படாத வகையில், வழக்கமான மாதிரி தயாரித்த பிறகு மதிப்பெண் திட்டத்தை தயாரிக்கும் போது, இந்த விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்