O/L பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் கோயிலுக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

Date:

நாடளாவியரீதியில் இன்று (6) ஆரம்பமான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பரீட்சை மண்டபத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கோயிலுக்கு சென்ற மாணவன் துரதிஸ்டமாக உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை மரதன்ன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவனே எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.

ஆர்.அரிநாத் என்ற மாணவன் தனது தந்தையுடன் பரீட்சை நிலையத்திற்குச் செல்லும் போது கோயிலுக்கு சென்றுள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, ​​தன் தந்தையிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் உதவியுடன் மாணவனின் தந்தை முச்சக்கர வண்டியில் மாணவனை மரதன்னை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஹரிநாத் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரதென்ன தெதனகல தமிழ் வித்தியாலத்தில் அவர் பயின்றார்.

பின்னவல புதுகடுவ நாவலர் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பரீட்சை நிலையத்தை அடைவதற்குள் உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்