தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளராக எந்திரி பாரதிதாசன் நியமனம்

Date:

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளராக எந்திரி
பாரதிதாசன் நியமனம்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் பதவியான பொது
முகாமையாளர் பதவிக்கு மிக நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழர் ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரி. பாரதிதாசன் என்பவரே தகுதியின் அடிப்படையில்
நேர்முகத்தேர்வின் மூலம் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் துறையில் இரண்டு முதுமானிப் பட்டங்கள் உட்பட மூன்று முதுமானி
பட்டங்களை பெற்றுள்ள இவர், 1992 ஆம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பொறியியலாளராக பணியில் இணைந்துகொண்டார்.

ரி.பாரதிதாசன் அவர்கள் பதில் முகாமையாளர், மாவட்ட முகாமையாளர், பிராந்திய முகாமையாளர்,வடக்கு மாகாண உதவி பொது முகாமையாளர், மற்றும் சமூக அடிப்படையிலான கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம்,யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர் விநியோகம் சுகாதார மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் திட்டப் பணிப்பாளராகவும். ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் திட்டப் பணிப்பளராகவும், என பல பதவிகளை வகித்த அவர் இறுதியாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாண உதவி பொது முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து
செட்டிக்குளம் மெனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த காலத்தில்
குறைந்தளவிலான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை கொண்டு அனைத்து மக்களுக்குமான நீர் வழங்கல் நடவடிக்கையினை பொறுப்பாக இருந்து சிறப்பாக
மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்