கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேரை, கனடிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
45 வயது நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வான்கூவர் புறநகர்ப் பகுதியில் சீக்கியக் கோயில் அருகே அவர் காரில் இருந்தபோது முகமூடி அணிந்த இருவர் அவரைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.
நிஜார் அந்தக் கோயிலின் தலைவராக இருந்தார்.
அவரைச் சுட்டவர்கள் இருவரும் காத்திருந்த காரில் தப்பிச் சென்றுவிட்டதாகச் சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 28 வயதான கரன்ப்ரீத் சிங், 22 வயதான கமல்ப்ரீத் சிங் மற்றும் 22 வயதான கரண் பிரார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட போது மூவரும் எட்மண்டனில் வசித்து வந்த இந்திய பிரஜைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



