Pagetamil
முக்கியச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைந்தன!

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.175 குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

மேலும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

Leave a Comment