சமத்துவக் கட்சியின் 2024 மே தினக் கூட்டம் கிளிநொச்சி நகரில்
அமைந்துள்ள பசுமை பூங்காவில் இடம்பெற்றது.
இன்று (01) பிற்பகல் 2 மணிக்கு சமத்துவக் கட்சியின் தலைவர் சு.மனோகரன்
தலைமையில் ஆரம்பமான மே தினக் கூட்டமானது ஒடுக்கும் அதிகாரத்தை
உடைதெறிவோம், உரிமையை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி
மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தம் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்களின் பங்குபற்றுலுடன் இடம்பெற்றது.
நிகழ்வில் கூட்டுறவு அமைப்புகள், கடற்றொழில் அமைப்புக்கள், ஆசிரிய
தொழிற்சங்கம், விவசாய அமைப்புக்கள், பெண் அமைப்புக்கள் உள்ளிட்ட பல
அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, கட்சியின் மே
தின பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் நிகழ்த்தினார்.