மானிப்பாயில் சிக்கிய மரக்கடத்தல்காரர்கள்

Date:

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைக் குற்றிகள் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை யாழ் மாவட்ட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து முதிரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டு வரபட்டதாக வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் பொழுது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்