சமத்துவக் கட்சியின் மே தினம் கிளிநொச்சி பசுமை பூங்காவில்

Date:

சமத்துவக் கட்சியின் 2024 மே தின நிகழ்வுகள் வருகின்ற மே முதலாம் திகதி
பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தி பசுமை பூங்காவில்
இடம்பெறவுள்ளது.

ஒடுக்கும் அதிகாரத்தை உடைதெறிவோம், உரிமையை மீட்டெடுப்போம் எனும்
தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தம்
தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் மே தின
நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சமத்துவக் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இடர் நிறைந்த வரலாற்றுத் தருணத்திலேயே இந்த மேநாளும் வந்திருக்கிறது இன
ஒடுக்குமுறையும் பொருளாதாரப் பிரச்சினையும் இணைந்து இரட்டைத்தாக்குதலை
நம்மீது மோசமாக நடத்துகிறது. இரண்டையும் முறியடித்து விடுதலைஅடைய
வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

இனப்பிரச்சினைக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வைக் காண வேண்டிய
அரசும் ஆட்சியாளர்களும் அதை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கும் போக்கே
தொடருகிறது. அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பதாகக் காட்டிக்
கொள்வோரும் மறைமுகமாக இனவாதத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும்
ஒத்துழைக்கிறார்கள். ஆகவே இரண்டு தரப்பும் மக்களுக்கு விரோதமாகவே
செயற்படுகின்றன. இவற்றை நாம் முறியடிக்க வேண்டும். அதற்காக விழிப்படைய
வேண்டும். ஒன்றிணைந்து பலமடைய வேண்டும்.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னும் இனப்பிரச்சினைக்கான
தீர்வைக் காண்பதற்கு எந்த முயற்சிகளும் உருப்படியாக
முன்னெடுக்கப்படவில்லை. பதிலாக இனமுரண்பாட்டை வளர்க்கும் விதமாக நில
ஆக்கிரமிப்பு, பௌத்த விரிவாக்கத்துக்காக விஹாரைகளைக் கட்டுதல் என்றே
அரசாங்கம் செயற்படுகிறது. இந்த நாட்டுக்குத் தேவையாக இருப்பது
தொழிற்சாலைகளே தவிர, ஆக்கிரமிப்பு விஹாரைகளல்ல. வேலை வாய்ப்பில்லாமல்
இளைய தலைமுறையினர் தவிக்கின்றனர். உற்பத்தியில்லாமல், பொருளாதார
வளர்ச்சியில்லாமல் நாடு கடனில் மூழ்குகிறது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் தினமும் ஆயிரக்கணக்கில்
ஆற்றலுடையோர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இதனால்
உழைப்புச் சக்தியும் அறிவாற்றலும் நிறைந்த மனித வளம் நாட்டை விட்டுச்
செல்கிறது. அந்த வளத்தை அப்படியே பிற நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. இந்த
நிலை தொடர்ந்தால், மேலும் நமது நாடு பின்னடையும். உடலில் இருந்து குருதி
வடிந்தோடித் தீர்ந்து விட்டால் உயிராபத்தைச் சந்திக்க
வேண்டியிருப்பதைப்போலவே இந்த மனித வள இழப்பு நாட்டின் வளர்ச்சிக்கும்
எதிர்காலத்துக்கும் ஆபத்தை விளைக்கக் கூடியது. ஆனால், இனவாதிகள்
இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கத் தயாரில்லை.

இன்று நாட்டின் வளங்களையெல்லாம் அந்நிய சக்திகள் கொள்ளையடிக்க
முற்படுகின்றன. ஒவ்வொரு பிரதேசங்களிலும் வளக் கொள்ளைக்கு அரசாங்கமே
துணைநிற்கிறது. அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் சக்திகள் மக்களுக்கு
விரோதமான முறையில் வளக்கொள்ளைக்குத் துணைபோகின்றன. அனைத்து
நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாழ்கின்ற மக்களே இதற்கும் எதிராகப் போராட
வேண்டியுள்ளது.

உழைப்பாளர்களுடைய உரிமைக் குரலுக்கான இந்த நாளில் உழைப்பவர்களோடு
இணைந்து அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எங்களை எழுச்சி கொள்ள
வைப்போம். அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடி, உரிமை பெற்று
சமத்துவமாக வாழ்வதே நமது இலட்சியமாகும்.

.மே நாள் என்பது இவை அனைத்தையும் எதிர்த்து உடைப்பதற்கான ஒருங்கிணைந்த
நமது எழுச்சியையும் பலத்தையும் எதிர்ப்புணர்வையும் பகிரங்கமாக
வெளிப்படுத்துவதாகும். இந்த ஒருங்கிணைந்த எழுச்சியோடு நாம் நமது பலத்தைப்
பெருக்க வேண்டும். ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வை வளர்க்க
வேண்டும். அதற்கான உறுதியை எடுத்துக் கொள்வோம். அதில் உறுதியுடன் நின்று
வெற்றியடைவோம். அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்து முறியடிப்போம்.
நம்முடைய அறிவினாலும் ஆற்றலினாலும் வென்று புதிய சமத்துவ, சரித்திரம்
படைப்போம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்