ஈராக்கிய சமூக ஊடகப் பிரபலமான ஓம் ஃபஹத், பாக்தாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (26) இவ்வாறு அவர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில், ஓம் ஃபஹத் பாக்தாத்தின் ஜயோனா சுற்றுப்புறத்தில் குஃப்ரான் சவாடியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார் என்று உறுதிப்படுத்தியது.
அவரது மரணம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈராக் பாதுகாப்பு வட்டாரம் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர் உணவு விநியோகம் செய்யும் நபராக காட்டிக் கொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓம் ஃபஹத் இறுக்கமான ஆடைகளை அணிந்து பொப் இசைக்கு நடனமாடும் டிக்டொக் வீடியோக்களுக்காக பிரபலமானார்.
Well known Iraqi blogger “Um Fahad” was gunned down by a professional assassin in Baghdad earlier tonight. Terrifying footage of the attack. pic.twitter.com/J5wfngnazN
— Steven Nabil (@thestevennabil) April 26, 2024
“கண்ணியம் மற்றும் பொது ஒழுக்கத்தை” குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வீடியோக்களை பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டுபெப்ரவரி மாதம் நீதிமன்றத்தால் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஈராக்கிய “ஒழுக்கங்கள் மற்றும் மரபுகளை” மீறுவதாகக் கூறிய சமூக ஊடக உள்ளடக்கத்தை சுத்தம் செய்ய அரசாங்கம் 2023 இல் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. டிக்டொக், யூடியூப் மற்றும் பிற தளங்களில் அது அவமானகரமானதாகக் கருதப்படும் கிளிப்களைத் தேடுவதற்கு உள்துறை அமைச்சகக் குழு நிறுவப்பட்டது.