Pagetamil
இலங்கை

சு.கவுக்கு மேலும் பல தடையுத்தரவுகள்

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பொதுச் செயலாளராகவும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (24) இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களுமான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரால் முன்வைக்கப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் வெளியிடப்பட்ட இந்த தடை அடுத்த மாதம் எட்டாம் திகதி வரை அமுலில் இருக்கும்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இந்தப் பதவிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்தப் பதவிகளைத் தெரிவு செய்வதற்காக கூட்டப்பட்ட நிறைவேற்று சபை சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil

Leave a Comment