யாழ்ப்பாணம், நாவாந்துறையில் இனந்தெரியாதவர்களால் 2 வாகனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இன்று (15) அதிகாலை 12.30 தொடக்கம் 3 மணிக்கு இடையில் வாகனங்கள் தீயிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
டெமோ பட்டா (NP PU – 5205) மற்றும் முச்சக்கர வண்டி (NW YQ – 7900) என்பவற்றையே இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




