தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: நேரில் ஆஜராக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

Date:

பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன், தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்