பொது வேட்பாளர் சாத்தியமற்ற யோசனை: சீ.வீ.கே!

Date:

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைக்கும் யோசனை சாத்தியமற்றது என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ் கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி ஒரு கட்சியாக இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வரவில்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறைச் சாத்தியமாகாது.

பொது வேட்பாளரை தேடிப் பிடிபதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித் தான் இருக்கிறது. ஆகவே தனிப்பட்ட வகையில் என்னுடைய கருத்து என்னவுனில் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம்.

ஆனால் ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கிற பொழுது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களடு பேரம் பேசாமலும் போகலாம்.

இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும். அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும். வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும்.

பொது வேட்பளர் தெரிவிற்கு எந்த கட்சி என்ற விடயத்தில் பூச்சுக்களுக்குற் இடங்கொடுக்க கூடும். ஆகவே எல்லா விடயத்திலயும் பார்க்கிற பொழுது இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனாலும் கட்சி இனி கலந்து பேசி முடிவிற்கு வரலாம். அதன் பிறகு அதனோடு நாங்கள் உடன்படுவதோ இல்லையா என்பதையும் தீர்மானிக்கலாம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்