யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காடு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை பின்னாலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக செம்மணி பகுதியில் ஊடாக திரும்பி செல்ல முற்பட்ட முதியவர் மீது மோதியதில் முதியவர் ஸ்தலத்திலே பலியானார்.
உயிரிழந்தவர் 61 வயதுடைய க. மோகனதாஸ் என கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1