வவுனியா சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்ததையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டொன் சமில் திலான் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு தொடர்பில் வவுனியா நீதவான் நீதிமன்றில் நடந்த வழக்கில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1