இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Date:

முன்னாள் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியால் வல்லுறவுகுள்ளாக்கப்பட்ட, தாக்கப்பட்ட, துஷ்பிரயோகம் மற்றும் விற்கப்பட்ட தங்கள் வேதனையான அனுபவங்களை பல யாசிதி பெண்கள்டிஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய கிழக்கு ஊடகமொன்றில் இவை வெளியிடப்பட்டன. இதே ஊடகத்தில், சில வாரங்களின் முன்னர் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவருடனான நேர்காணல் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து பாதி்கப்பட்டவர்களின் நேர்காணல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மனைவி நிரபராதி போல் நடித்தார் ஆனால் அப்படி இல்லை, அல்-பாக்தாதியின் மனைவிகளை விசாரிக்க வேண்டும், அதனால் அவர்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஐஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியவர்களில் ஒருவரான அஷ்வாக் ஹாஜி ஹமித் கூறினார்.

அபுபக்கர் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரான, அஸ்மா முகமது, அவரும் அவரது கொல்லப்பட்ட கணவரும் சிறைபிடிக்கப்பட்ட யாசிதி பெண்களை சித்திரவதை செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நேர்காணலின் போது மறுத்தார். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை நன்றாக நடத்தினார்கள் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து, வெளியான  இரண்டு பகுதி சிறப்பு நேர்காணலில், முன்னாள் ISIS கைதிகள் பக்தாதியின் மனைவியின் கூற்றுகளுக்கு பதிலளித்துள்ளனர், அவர்கள் கடுமையாக நடத்தப்பட்டதாகவும், வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

உயிர் பிழைத்த யாசிதி இனப்பெண் ஹமீத் நேர்காணலில், ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட விவரங்களையும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தனது ஒன்பது வயது சகோதரியையும் சிறைபிடித்துச் சென்றது பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்தினார்.

அல்-பாக்தாதி யாசிதி பெண்களை எப்படி பலாத்காரம் செய்து மற்ற போராளிகளுக்கு விற்றார் என்பதையும், அவரது மனைவி அவர்களை எப்படி அடித்து துன்புறுத்தினார் என்பதையும் அந்தப் பெண் கூறுகிறார்.

“அபுபக்கர் அல்-பாக்தாதி ஒவ்வொரு பெண்ணையும் பலாத்காரம் செய்கிறார், பின்னர் அவர்கள் அவளை வேறொருவருக்கு விற்கிறார்கள்,” என்று ஹமீத் கூறினார்.

ஹமீத் தாலு என்ற யாசிதி  இனத்தவர், ISIS பயங்கரவாதிகள் தனது பத்து வயதுடைய இரண்டு மகள்கள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு கைப்பற்றினார்கள் என்று நேர்காணலில் கூறினார்.

அந்த நபர் தனது உறவினர்களை விடுவிக்க கடத்தல்காரர்களுக்கு $220,000 கொடுக்க வேண்டியிருந்தது, என்றார்.

மூன்று மாத சிறைப்பிடிப்பின் போது, ஈராக்கின் நினிவேயில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தன்னை கடத்தியவர்களிடமிருந்து ஹமீத் தப்பிக்க முயன்றார்.

அந்த பெண், மற்ற கைதிகளுடன் சேர்ந்து, உடம்பு சரியில்லை என்று நடித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தூக்க மாத்திரையை திருடி, அவர்களை கண்காணித்து வந்த ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களின் உணவில் மறைத்து வைத்தனர்.

பயங்கரவாதிகள் தூங்கியபோது, ​​பெண்கள் சிஞ்சார் மலையை நோக்கி தப்பி ஓட முடிந்தது.

பிடிபட்ட பெண்களை அதிக விலைக்கு விற்க அல்-பாக்தாதியின் மனைவிகள் எப்படி போட்டியிட்டார்கள் என்று மற்றொரு யாசிதி உயிர் பிழைத்தவர் கூறினார்.

யசிதி பெண்களை நன்றாக நடத்துவது குறித்து மனைவிகள் பொய் சொன்னதாக சௌத் ஹமீட் கூறினார், துஷ்பிரயோகம் மற்றும் அவர்களின் அடிமைத்தனம் பற்றி அவர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

யாசிதி உயிர் பிழைத்தவர்களில் மற்றொருவரான ஷிரின் கலஃப், ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களை நிலத்தடி சிறையில் அடைத்து சித்திரவதை மற்றும் வல்லுறவுக்கு உட்படுத்தியதை வெளிப்படுத்தினார்.

அந்த நேர்காணலில், ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு குழந்தைகளுக்கு போதைப்பொருள்களை தவறாமல் கொடுத்தது மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் சொர்க்கம் என்று உறுதியளித்து அவர்களை மயக்கியது பற்றி அவர் கூறுகிறார்.

அல்-பாக்தாதி தலைமையிலான ISIS, 2014 இல் ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, இரும்புக்கரம் கொண்டு அப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கியது.

அமெரிக்க ஆதரவுப் படைகள் 2017ல் ஈராக்கிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டது. சிரியாவில் ஐஸ் தோற்கடிக்கப்பட ரஸ்யாவும் முக்கிய பங்களித்தது. 2019 ஆம் ஆண்டில், வடமேற்கு சிரியாவில் ஒரு நடவடிக்கையில் அல்-பாக்தாதியை அமெரிக்க துருப்புக்கள் கொன்றதாக வாஷிங்டன் அறிவித்தது.

கடத்தப்பட்ட பெண்களை அல் பக்தாதி வல்லுறவுக்குள்ளாக்குவது வழக்கம். அவரது வீட்டில் 10 இற்கும் மேற்பட்ட யாசிதி இன பெண்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததையும், கடத்தப்பட்ட பிற வெளிநாட்டு பெண்களையும் அடிமையாக வைத்திருந்து வல்லுறவுக்குள்ளாக்கியதையும் பிற்காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்