வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் தவரூபன் லக்சிகா (24) என்பவரே உயிரிழந்தார்.
இவர் கடந்த 17ஆம் திகதி மாலை தண்ணீர் இறைக்கும் மோட்டார் சுவிட்சை ஓன் செய்த போது, மோட்டார் குழாய் கழன்றுள்ளத. அதை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1