மற்றையவர்களை போன்ற மூளையே எனக்கும் உள்ளது. 7 மூளை எனக்கு கிடையாது என தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ச.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பசிலிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
ராஜபக்ச தரப்பின் தீவிர ஆதரவாளர்களான அரசியல் பிரமுகர்கள், பசில் ராஜபக்சவுக்கு 7 மூளைகள் உள்ளன என விதந்தோதுவது வழக்கம். ஏனைய தரப்பினர் இதை கிண்டலடித்தாலும், அவர்கள் பசிலை விதந்தோதுவதை கைவிடவில்லை.
எனினும், அண்மையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, இவ்வாறான பல கற்பிதங்களை தவிடுபொடியாக்கியிருந்தது.
இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு பசில் பேட்டியளித்த போது,
உங்கள் தரப்பில் சிலர் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ஏழு மூளைகள் இருப்பதாக சொன்னார்கள். நமக்குத் தெரிந்த வரையில், மருத்துவ ரீதியாக அது சாத்தியமில்லை. உங்களுக்கு ஏழு மூளைகள் இருப்பதாக மருத்துவ ரீதியாக அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது.
பசில்- அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. அப்படி ஏதும் இல்லை.
கேள்வி- அப்படியென்றால் உங்களுக்கு ஏழு மூளை இல்லை என்று அர்த்தமா?
பசில்- இல்லை.
கேள்வி- எங்களைப் போன்ற மூளை உங்களுக்கு இருக்கிறதா?
பசில்- மற்றவர்களைப் போலவே எனக்கும் இருக்கிறது
கேள்வி- இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மூளையும் பசிலின் மூளையும் எப்படி வேறுபடுகின்றன?
பசில்- இல்லை, நானும் எல்லோரையும் போல் தான்.