அகதிதஞ்சம் கோரிய இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாடொன்றில் புகலிட கோரிக்கை கோரிய இளைஞன் கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடொன்றில் வசித்துவரும் நிலையில் குறித்த இளைஞனை விசாரணைக்காக அழைத்துள்ளனர்
வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (32) என்ற இளைஞனே கொழும்பு பயங்கரவாத மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்ற போலீசார் குறித்த அழைப்பாணையிணை அவரின் பெற்றோரிடம் வழங்கியுள்ளனர்
குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .01.16 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
புலம்பெயர் நாட்டில் தமிழ்தேசிய எழுச்சி நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் குறித்த இளைஞன் தன்னை ஈடுபடுத்தி வருகின்ற நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் கடமையாற்றும் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின்ரால் எதிர்வரும் 15-03-2024 அன்று விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.