அறுபத்து மூன்று வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் மீண்டும் இலங்கையின் எரிசக்தித் துறையில் இணையவுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாதம் 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிக்கவுள்ளது.
1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வந்த ஷெல் எரிபொருள் நிறுவனத்தை 1961ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் கைப்பற்றியது.
அதன் பின்னர் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.
இது சிங்கப்பூரை எரிசக்தித் துறையில் அதிகார மையமாக மாற்ற உதவியது.
அரசாங்கத்தின் எரிசக்தி மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ், ஷெல் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சேமிக்கவும் மற்றும் விநியோகிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடங்க ஐம்பது உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன.




