ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 33 வருடம் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையான சாந்தன் என்ற ரி.சுரேந்திரரஜாவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், சடலத்தை இலங்கையில் பெறுபவரின் பெயரில் சாந்தனின் (ரி.சுரேந்திரராஜா) பெயரே குறிப்பிடப்பட்டுள்ளதால், இன்று மாலை வரை விமான நிலையத்திலிருந்து சடலத்தை வெளியே கொண்டு வருவதில் தாமதம் நிலவுகிறது.




