சியாம்பலாண்டுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொடையன பிரதேசத்தில் மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இ.போ.ச பேருந்து ஒன்று இன்று (29) காலை கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 28 பாடசாலை மாணவர்கள் மற்றும் 14 பேர் காயமடைந்து சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1