திருகோணமலையில் அதிக விலைக்கு வலம்புரியை விற்பனை செய்ய கொண்டு சென்ற இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (28) சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – கண்டி வீதியில் கப்பல்துறை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
945 கிராம் எடையுடைய வலம்புரியை தம்வசம் வைத்திருந்து பணத்திற்கு விற்பனை செய்வதற்கு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற புளியங்குளம் மற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 49 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.



