களுத்துறை “கேக் லேடி” என்ற பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகளினால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பெண் தன்னையும், பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளை செய்துள்ளதாகவும், அந்தப் பதிவுகள் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அபேகுணவர்தன தவறு செய்திருந்தால் அவரை விமர்சித்தாலும் பரவாயில்லை, தவறு செய்யாமல் இவ்வாறு விமர்சிப்பது சரியல்ல எனவும், அந்த முகநூல் பதிவுகளில் அவர் ஒரு திருடன் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




