இரணைமடுகுளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

Date:

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள
சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடுகுளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல்
நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை
தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு,
இரணைமடுகுளத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே
குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய
தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைமடுகுளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய
பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோதம மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக
மோசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல்
வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு,
அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும்
செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது. இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர்
எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர், இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலீஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும்
அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.
மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை,
பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல்
அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன
செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்