ஆற்றில் சடலமாக மிதந்த செல்வக்குமாரி

Date:

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த பழனிவேல் செல்வகுமாரி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பேருந்தில் பயணித்த பயணிகள் ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்