26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

ஒரு திட்டத்தை ‘சரியானது’ ஆக்குவதில் பல விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. எல்லா விடயங்களையும் கவனமாக திட்டமிட்டு செயற்படுத்தினாலே, ஒரு விடயத்தை சாதிக்க முடியும். காதலில் சாதிக்க வேண்டுமென்றாலும், இந்த திட்டமிடுதல் முக்கியம்.

இந்த காதலர் தினத்தில் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம், காதலை முன்மொழிய நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால்… உங்களுக்காகவே, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கணிதவியலாளர் ஒருவர் சரியான முன்மொழிவின் பின்னணியில் உள்ள சூத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த சூத்திரத்தை வெளிப்படுத்தும் முன், சரியான முன்மொழிவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பூக்கள், ஒரு ஆடம்பரமான உணவு, சூரிய அஸ்தமனத்துடன் கூடிய கடற்கரை… இப்படி நினைக்கிறீர்களா?. இவை எதுவும் இல்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணிதவியலாளர் டொக்டர் டாம் க்ராஃபோர்ட் கருத்துப்படி, வெற்றிக்கான செய்முறை எண்களில் தங்கியுள்ளது.

“வெற்றிக்காக இந்த செய்முறையை நீங்கள் பின்பற்றினால், அந்த ‘ஓகே’ பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை நீங்களே வழங்குவீர்கள்” என்று கணிதவியலாளர் கூறினார்.

ஒரு சரியான முன்மொழிவின் கணிதத்தில் சரியான மதிப்பெண்ணாக 100 உள்ளது. ‘ஆம்’ என்பதற்கு, முன்மொழிவு நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும், அவை ஒவ்வொன்றும் 20 புள்ளிகள் மதிப்புடையவை – முன்மொழிவு உணவின் நேரம், முன்மொழிவின் நேரம், நீங்கள் போட்ட திட்டமிடுதலின் அளவு மற்றும் இறுதியாக நிச்சயதார்த்த மோதிரத்தின் விலை.

கூடுதலாக, ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் சில எளிய விஷயங்களால் அதிகரிக்கப்படலாம். அது கடைசி 20 புள்ளி மதிப்புள்ளது – இதயப்பூர்வமான பேச்சைக் கொடுங்கள், ஒரு காதல் அமைப்பை உருவாக்குங்கள் (பூக்கள் மற்றும் விளக்குகளை நினைத்துப் பாருங்கள்) மற்றும் நல்ல இசையை இசைக்கவும்.

2,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், இரவு 8:06 மணிக்கு உங்கள் உணவைத் தொடங்க வேண்டும் என்றும், பிரதான உணவின் பிறகு, ஆனால் இனிப்பு உட்கொள்வதற்கு முன் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் டொக்டர் க்ராஃபோர்ட் பரிந்துரைக்கிறார். நிச்சயதார்த்த மோதிரத்திற்கு உங்கள் சம்பளத்தில் குறைந்தபட்சம் 2.5 மாதங்கள் செலவாக வேண்டும், இறுதியாக, முன்மொழிவைத் திட்டமிட குறைந்தபட்சம் 68 நாட்களை நீங்கள் ஒதுக்க வேண்டும்.

கணிதவியலாளரின் கூற்றுப்படி, நீங்கள் சூத்திரத்தைப் பின்பற்றினாலும்,  முன்மொழிவின் போது சில நடத்தைகள் மதிப்பெண்ணைக் கெடுக்கலாம்.

உங்கள் துணையு்ன் பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலைச் சரிபார்த்தால் உங்களுக்கு 20 புள்ளிகள் குறையும். டிவியை இயக்கினால் இன்னும் 14 புள்ளிகள் குறையும். எரிந்த உணவுக்கு 10 புள்ளிகள் குறையும். இறுதியாக, உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் ஆறு புள்ளிகளைக் கழிக்க வேண்டும் (ஆங்கிலேய பின்னணியில் இந்த சூத்திரத்தை முன்வைத்துள்ளார். இலங்கை, இந்திய பின்னணியில் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் 99 புள்ளிகளை குறைக்க வேண்டியிருக்கும்).

“தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பொறுத்தவரை, அந்த தொலைபேசிகளை சுவிட்ச் ஓஃப் செய்து, பார்வைக்கு வெளியே வைத்திருங்கள், குழந்தைகளை ஒரு குழந்தை பராமரிப்பாளரிடம் இறக்கி விடுங்கள், உணவை எரிக்க வேண்டாம்!”  என க்ராஃபோர்ட் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment