பல்லேகலேயில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதும் நிஸங்கவின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 381 ரன்கள் எடுத்தது. நிஸங்க 139 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 88 ரன்கள் எடுத்தார். அவரும் நிஸங்கவும் முதல் விக்கெட்டுக்கு 182 ரன் பார்ட்னஷிப் அமைத்தனர்.
நாணயச்சுழுற்சியில் வென்று முதலில் பந்துவீசுவதற்கான ஆப்கானின் முடிவு தவறாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாட களம் சாதகமாக அமைந்தது.
பதும் நிஸங்க 139 பந்துகளில் 20 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 210 ஓட்டங்களை குவித்தார். ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டம் பெற்றவர் என்ற சாதனை சனத் ஜயசூரிய வசம் இருந்தது. இந்தியாவுக்கு எதிராக அவர் 189 ஓட்டங்களை பெற்றிருந்தார். நிஸங்க இன்று அதை முறியடித்தார்.
382 என்ற வெற்றியிலங்கை விரட்டும் ஆப்கானிஸ்தான், 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களை பெற்றுள்ளது.